கோப்புப் படம் 
தேசிய செய்திகள்

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு..!

லடாக்கில் இன்று காலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

லடாக்,

லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் கூறியுள்ளது.

லே பகுதியில் இருந்து வடக்கு-வடகிழக்கில் 245 கிலோமீட்டர் தொலைவில் காலை 11.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின.

ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை