தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு

உத்தரகாண்டில் இன்று காலை 8.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

டேராடூன்,

உத்தரகாண்டில் உள்ள உத்தரகாஷி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.19 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.85 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 78.60 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.