புதுடெல்லி,
டெல்லியின் பல்வேறு இடங்களில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று பிற்பகல் 2.25 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்துகுஷ் மலை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.