கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அம்மாநிலத்தின் கொல்கத்தா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.
நில அதிர்வால் வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகள், கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அதேவேளை, இந்த நில அதிர்வால் உயிரிழப்போ?, யாருக்கும் காயம்? உள்பட எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.