அலகாபாத்
தேர்தலால் கொரோனா பேரழிவுக்கான தாக்கம் ஏற்படும் என்பதைத் தேர்தல் ஆணையமும் அரசும் கணிக்கத் தவறிவிட்டதாக அலகாபாத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணை ஒன்றின் போது கருத்துத் தெரிவித்த அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி, உத்தரப்பிரதேசத்தில் ஊரகப்பகுதிகளில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
கொரோனா சூழலில் 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலையும், உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த அனுமதித்தது பேரழிவுக்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத் தேர்தல் ஆணையமும், ஐகோர்ட்களும், அரசும் கணிக்கத் தவறிவிட்டன என நீதிபதி தெரிவித்தார்.