தேசிய செய்திகள்

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓம்பிரகாஷ் ராவத் நியமனம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓம்பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #ElectionCommission #OmPrakashRawat

புதுடெல்லி,

இப்போது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள அச்சல் குமார் ஜோதியின் பதவிகாலம் நாளை 22-ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் அப்பதவிக்கு ஓம்பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என சட்ட அமைச்சகம் தெரிவித்து உள்ளது. முன்னாள் நிதித்துறை ஐஏஎஸ் அதிகாரி அசோக் லவாசா தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 1977-ஆம் ஆண்டை ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஓம்பிரகாஷ் ராவத் செவ்வாய் அன்று தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்க உள்ளார். தேர்தல் கமிஷ்னராக கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்யப்பட்டார்.

ஓம்பிரகாஷ் ராவத் தன்னுடைய நீண்ட அரசு பணி காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசில் முக்கியமான துறையில் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1993-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சக செயலாளாராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.