திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். தெலுங்கு வருடபிறப்பு மற்றும் தமிழ் வருடப்பிறப்பு அடுத்தடுத்து வரும் இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் தேவஸ்தானம் இலவச தரிசனத்தை ரத்து செய்தது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கொரோனா அச்சத்தால் பக்தர்கள் வருகை குறைந்து காணப்படுகிறது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. திருமலை தேவஸ்தானத்திற்கு வருமானமும் வெகுவாக குறைந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல் இங்கிருக்கும் வியாபாரிகளும் தங்களுக்கு வியாபாரம் குறைந்துவிட்டதாக வேதனையுடன்தெரிவித்தனர்.
பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, ஏழுமலையான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக வரும் காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் குறையலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.