புதுடெல்லி
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். காலை அவரிடம் தொடங்கிய விசாரணை சுமார் 6.30 மணியளவில் முடிந்தது. விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. இதே வழக்கில், இன்றும் சி.பி.ஐ., முன் சிதம்பரம் ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக வரும் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது.