தேசிய செய்திகள்

கர்நாடக அரசு தொடக்கப்பள்ளியில் கல்வித்துறை மந்திரி நாகேஷ் ஆய்வு

சிவமொக்காவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கல்வித்துறை மந்திரி நாகேஷ் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

தொடக்கப்பள்ளிகள்

கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் கடந்த ஆண்டு(2020) மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. மேலும் தொடக்கப்பள்ளிகள் அக்டோபர் மாதம் 25-ந் தேதி திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இன்று மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் சிவமொக்கா மாவட்டத்திலும் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன.

சிவமொக்கா டவுன் அருகே மலவகொப்பாவில் உள்ள அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் இன்று உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு ஆசிரியர்கள் கைகளில் கிருமிநாசினி திரவம் கொடுத்து கைகளை கழுவ செய்து வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மந்திரி நாகேஷ் வருகை

முதல்நாளான இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 வரை அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடந்தன. அதன்பிறகு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதேநிலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நீடித்தது. இந்த நிலையில் நண்பகல் 12 மணியளவில் கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி நாகேஷ் திடீரென மலவகொப்பா அரசு பள்ளிக்கு வந்தார்.

அவர் அங்கிருந்த தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுன் கலந்துரையாடியானர். பின்னர் பள்ளி திறக்கப்பட்டது பற்றியும், மாணவ-மாணவிகளின் வருகை குறித்தும், பள்ளியில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காணொலி மூலம்...

மாநிலம் முழுவதும் தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் காணொலி மூலம் கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டாலும் வருகிற 1-ந் தேதி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டுமே மாநிலம் முழுவதும் தொடக்கப்பள்ளிகள் செயல்படும். வருகிற 2-ந் தேதியில் இருந்துதான் தொடக்கப்பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழுநேரம் செயல்படும். இதுபற்றி பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து