தேசிய செய்திகள்

புதிய கல்விக்கொள்கை: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை

புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மே 17 ஆம் தேதி (இன்று) மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை செய்யவுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மே 17 ஆம் தேதி (இன்று) மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை செய்யவுள்ளார்.

வரும் கல்வியாண்டில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடனும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், இந்த கூட்டத்தில் கொரோனா சூழல், ஆன்லைன் வகுப்பு உள்ளிட்டவையும் ஆலோசனை செய்யப்படவுள்ளது. கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை நுழைய அனுமதிக்க மாட்டோம் என கூறியது நினைவுகூரத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை