கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே பெட்ரோல்-டீசல் விலை அதிகம் - பா.ஜனதா குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே பெட்ரோல்-டீசல் விலை அதிகமாக உள்ளதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று கேட்டுக்கொண்டார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே பெட்ரோல்-டீசல் விலை அதிகமாக இருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. அந்தவகையில் பெட்ரோல்-டீசல் விலை அதிகமாக இருக்கும் 10 மாநிலங்களில் 8-ல் எதிர்க்கட்சிகளே ஆட்சியில் இருப்பதாக கூறியுள்ளது. இதைப்போல பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு மோடி அரசுதான் காரணம் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் நிராகரித்து உள்ளது. வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்து உள்ளன.

பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாயை இழந்திருப்பதாக கூறியுள்ள பா.ஜனதா வட்டாரங்கள், அதேநேரம் எதிர்க்கட்சி ஆளும் 7 மாநிலங்கள் ரூ.11,945 கோடி வருவாய் பெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு