தேசிய செய்திகள்

ஜோத்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தின் போது கட்டிடப் பணியில் இருந்த 14 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உரிய பாதுகாப்புகள் இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதற்காக, கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் காண்டிராக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்