தேசிய செய்திகள்

‘ஏக்நாத் கட்சே பாதி உண்மையை பேசுகிறார்’ - தேவேந்திர பட்னாவிஸ்

ஏக்நாத் கட்சே பாதி உண்மையை பேசுகிறார் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் மோதலை அடுத்து பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே நேற்று கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் எனது வாழ்க்கையை அழிக்க முயற்சித்தவர் என்றும் ஏக்நாத் கட்சே பரபரப்பு குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் ஏக்நாத் கட்சே குற்றச்சாட்டு குறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

ஏக்நாத் கட்சே பாதி உண்மையை தான் பேசுகிறார். என் மீது புகார் கூறுவதாக இருந்தால், அவர் மூத்த தலைவர்களிடம் தெரிவித்து இருக்கலாம். அவர் கட்சியில் இருந்து விலகி இருப்பது துரதிருஷ்டவசமானது.

அவர் ராஜினாமா செய்யாமல் இருந்து இருந்தால் சிறந்ததாக அமைந்திருக்கும். இந்த பிரச்சினை பற்றி நான் இன்று பேச விரும்பவில்லை. சரியான நேரம் வரும்போது பேசுவேன்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை