தேசிய செய்திகள்

மராட்டிய முதல்-மந்திரி ஏக்னாத் ஷிண்டே: நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆதரவு எம்.எல்.ஏக்கள்

மராட்டிய மாநில முதல்-மந்திரி ஆக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டதால் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் முதல் மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நேற்று பதவி விலகினார்.

இதையடுத்து, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவியேற்பார் என்று எதிர்பாக்கப்பட்டது.

இந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தலைவர் ஏக்னாத் ஷிண்டே இன்று மராட்டிய கவர்னரை சந்தித்து பேசினர்.

அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், முதல்-மந்திரியாக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்பார் என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, கோவாவில் உள்ள ஏக்னாத் ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்கள் அவர் முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டதை கேட்டு நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்