பெங்களூரு:
பிரதமர் மோடி இன்று பெங்களூருவில் ஊர்வலம் நடத்துவதையொட்டி 35 சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த சாலைகளில் கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை.
வாகனங்கள் செல்ல தடை
சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்துகிறார். அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். பிரதமர் மோடி ஊர்வலத்தையொட்டி பெங்களூருவில் 35 சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 8 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை அந்த 35 சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜ்பவன் ரோடு, ராமகிருஷ்ண மகரிஷி ரோடு, மேக்கரி சர்க்கிள், ஆர்.டி.நகர், ஆர்.பி.ஐ. லே-அவுட், ரோஸ் கார்டன், ஜே.பி.நகர் 15-வது கிராஸ் மற்றும் 24-வது மெயின் ரோடு, 9-வது கிராஸ், சிர்சி சர்க்கிள், ஜே.ஜே.நகர், பின்னி மில் ரோடு, ஷாலினி கிரவுண்ட் ஏரியா, சவுத் என்ட் சர்க்கிள், ஆறுமுகம் சர்க்கிள், புள் டெம்பிள் ரோடு, ராமகிருஷ்ணா ஆசிரமம், உமா தியேட்டர், டி.ஆர்.மில், சாம்ராஜ்பேட்டை மெயின் ரோடு, வாழைக்காய் மண்டி ரோடு பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
கடைகள் திறக்க அனுமதி இல்லை
மேலும் கே.பி.அக்ரஹாரா, மாகடி மெயின் ரோடு, சோலூர் பாளையா, எம்.சி. சர்க்கிள், வெஸ்ட் சார்டு ரோடு, எம்.சி.லே-அவுட் 1-வது கிராஸ் ரோடு மற்றும் எம்.சி. ரோடு முதல் நாகரபாவி ரோடுவரை, பி.ஜி.எஸ், மைதானம், அவனூரு ஜங்ஷன், பசவேசுவராநகர் 8-வது மெயின் ரோடு, பசவேசுவராநகர் 15-வது மெயின் ரோடு, சங்கர மடம் ஜங்ஷன், மோதி ஆஸ்பத்திரி ரோடு ஜங்ஷன், நவரங் ஜங்ஷன், எம்.கே.கே. ரோடு, மல்லேஸ்வரம் சர்க்கிள், சம்பிகே ரோடு, சாங்கி ரோடுகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 35 சாலைகளிலும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக மாற்று பாதைகளில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சாலைகளில் உள்ள கடைகளை காலையில் திறக்கவும் போலீசார் அனுமதி வழங்கவில்லை.