தேசிய செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16ல் தேர்தல்; காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16ல் தேர்தல் நடைபெறும் என காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். 70 வயது நிறைந்த அவர் கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 14ல் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்றார். தலைவராக அவர் 19 ஆண்டுகள் நீடித்துள்ளார்.

இந்த நிலையில், கட்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் ராகுல் காந்தியை தலைவராக்க மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தினர். ராகுல் காந்தி கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி முதல் துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். 4 ஆண்டுகளுக்கும் மேல் பதவியில் நீடித்து வரும் அவர் தலைவராவதற்கு காரிய கமிட்டியின் முறையான ஒப்புதல் பெற வேண்டும்.

அதன்படிடெல்லியில் சோனியா காந்தி தலைமையில் காரியகமிட்டிகூட்டம் இன்றுகூடியது. இதில், ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறிய நிலையில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட வாய்ப்பில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

கட்சி தலைவர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 1ல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4. தேர்தல் முடிவுகள் 19ந்தேதி அறிவிக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்