தேசிய செய்திகள்

மது அருந்த பணம் கொடுக்காததால் தாயை அடித்து கொன்ற மின்வாரிய ஊழியர்

துமகூருவில், மது அருந்த பணம் கொடுக்காததால் மின்வாரிய ஊழியர், தனது தாயை அடித்து கொலை செய்தார்.

தினத்தந்தி

துமகூரு:

துமகூரு மாவட்டம் ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உப்பாரஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் திம்மக்கா (வயது 73). இவரது மகன் பிரசன்னகுமார். இவர், மின்வாரியத்தில் லைன்மேன் ஆக வேலை பார்த்து வந்தார். சமீபமாக பிரசன்னகுமார் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது தாய் திம்மக்காவிடம் மதுஅருந்த பணம் கொடுக்கும்படி பிரசன்னகுமா கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிரசன்னகுமார், தாய் என்றும் பாராமல் திம்மக்காவை அடித்து கொலை செய்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயநகர் போலீசார் பிரசன்னகுமாரை கைது செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்