தேசிய செய்திகள்

யானை தந்தங்களை விற்க முயன்றவர் கைது

யானை தந்தங்களை விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

யஷ்வந்தபுரம்:

பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே ஆர்.எம்.சி. யார்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் யானை தந்தம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 5 யானை தந்தங்கள் இருந்தது தெரிந்தது.

அவரிடம் இதுகுறித்து நடத்திய விசாரணையில், அவரது பெயர் ஸ்ரீசைலா என்பதும், அவர் பெங்களூருவுக்கு வந்து யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். யானை தந்தங்கள் 7 கிலோ எடை கொண்டது என போலீசார் கூறினர். மேலும் அவர்கள் தலைமறைவாக உள்ள மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு