ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் கம்ப்யூட்டர் பயிற்சி கல்வி நிறுவன மாணவர்கள் சென்ற பஸ் செங்குத்தான பள்ளத்திற்குள் விழுந்து விபத்து நேரிட்டது.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
9 மாணவிகள் உள்பட 11 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையும் விசாரணையை மேற்கொள்கிறது.