தேசிய செய்திகள்

காரைக்கால் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையின் தொடர் கைதால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

காரைக்கால்,

தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்களையும், 30-ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த 3 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.

இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது சர்வதேச எல்லையை கடந்து மீன் பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையின கைது செய்தனர். மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி