தேசிய செய்திகள்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்&மந்திரியாக பதவி வகித்து வருபவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது அலுவலக ஈ&மெயில் முகவரிக்கு நேற்று மர்ம நபர் ஒருவர் ஈ-மெயில் அனுப்பி இருந்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்&மந்திரியாக பதவி வகித்து வருபவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது அலுவலக ஈ&மெயில் முகவரிக்கு நேற்று மர்ம நபர் ஒருவர் ஈ&மெயில் அனுப்பி இருந்தார். இதன் தொடர்ச்சியாக இன்றும் அவர் மிரட்டல் ஈ&மெயில் அனுப்பி இருந்தார். அதில் தனது அடையாளம் மற்றும் முகவரி எதுவும் அவர் தெரிவிக்கவில்லை.

முதல்&மந்திரிக்கு 2 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் டெல்லி அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாநில உள்துறை செயலாளர் எஸ்.என்.சகாய் டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக் வர்மாவிடம் புகார் அளித்தார். அத்துடன் அந்த மர்ம நபர் அனுப்பியிருந்த ஈ&மெயிலையும், போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.