தேசிய செய்திகள்

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் இருந்து சுர்ஜித் பல்லா ராஜினாமா

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் இருந்து சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினராக பிரபல பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா இருந்து வருகிறார்.

இந்த நிலையில் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த டிசம்பர் 1ந்தேதியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்து உள்ளார்.

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினரான தேப்ராய் பதவி வகிக்கின்றார். இதில் பொருளாதார நிபுணர்கள் ரதின் ராய், ஆசிமா கோயல் மற்றும் சமிகா ரவி ஆகியோர் மற்ற பகுதிநேர உறுப்பினர்கள் ஆவர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்