தேசிய செய்திகள்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம்: ஒரே மாதத்தில் 10 லட்சம் பேர் இணைந்தனர்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் ஒரே மாதத்தில் 10 லட்சம் பேர் இணைந்து உள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 2 கோடியே 54 லட்சத்து 4 ஆயிரத்து 485 பேர் இணைந்து உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 10 லட்சத்து 51 ஆயிரத்து 769 பேர் இணைந்தனர். அதேபோல், தேசிய தொழிலாளார் காப்பீட்டு திட்டத்தில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரை 2 கோடியே 72 லட்சத்து 46 ஆயிரத்து 838 பேர் இணைந்து உள்ளனர். இதில், இந்த மாதம் மட்டும் 12 லட்சத்து 19 ஆயிரத்து 501 தொழிலாளர்கள் தங்கள் பங்களிப்பாக இணைந்து உள்ளனர்.

மேலும், இந்த மாதத்தில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 67 ஆயிரத்து 62 பேர் இணைந்தனர். அதில், 6 ஆயிரத்து 698 பேர் மத்திய அரசு ஊழியர்களும், 47 ஆயிரத்து 352 பேர் மாநில அரசு ஊழியர்களும் மற்றும் 13 ஆயிரத்து 12 பேர் அரசுத்துறையை சாராதவர்களும் அடங்குவர்.

மேற்கண்ட தகவலை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்