தேசிய செய்திகள்

வேலைவாய்ப்பு விகிதம் 5 ஆண்டு காணாத வீழ்ச்சி - வருண்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

வேலைவாய்ப்பு விகிதம் 5 ஆண்டு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளதாக வருண்காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பா.ஜனதா எம்.பி. வருண்காந்தி, மத்திய அரசை அடிக்கடி விமர்சித்து வருகிறார். நேற்று அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு விகிதம் 20.9 சதவீதத்தில் இருந்து 10.4 சதவீதமாக குறைந்துள்ளதாக 'இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி ஆகும்.பிரதமர் மோடி 10 லட்சம் காலியிடங்களை நிரப்புமாறு அரசு துறைகளை கேட்டுக்கொண்டார். ஆனால் எந்த துறையாலும் திடமான திட்டத்தை வகுக்க முடியவில்லை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இளைஞர்கள் காத்திருப்பார்கள்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு