தேசிய செய்திகள்

கம்ப்யூட்டர்களை கண்காணிக்க அதிகாரம்: போலீஸ் ராஜ்ஜியமாக மாற்ற முயற்சிப்பதா? - ராகுல் காந்தி கண்டனம்

கம்ப்யூட்டர்களை கண்காணிக்கும் அதிகாரம், போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றும் முயற்சி என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்படும், பெறப்படும், அனுப்பப்படும் தகவல்களை ஊடுருவி பார்க்கவும், கண்காணிக்கவும் 10 உளவு அமைப்புகளுக்கும், புலனாய்வு அமைப்புகளுக்கும் அதிகாரம் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவை போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றுவது உங்கள் பிரச்சினைகளை தீர்த்து விடாது, மோடிஜி. பாதுகாப்பு இல்லாத சர்வாதிகாரி நீங்கள் என்பதைத்தான் நாட்டின் 125 கோடி மக்களுக்கு இச்சம்பவம் நிரூபிக்கும் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது