தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

சோபியான்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள லடி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர். அந்த பகுதி முழுவதும் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது