தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்; 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

பிஜாப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திரா யாதவ் இதனை இன்று உறுதிப்படுத்தி உள்ளார்.

பிஜாப்பூர்

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி ஆற்று பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு இன்று சென்றனர்.

அப்போது, படையினரை நோக்கி நக்சலைட்டுகள் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில், 2 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். சீருடையில் இருந்த அவர்களிடம் இருந்து எஸ்.எல்.ஆர். துப்பாக்கி, இன்சாஸ் ரக துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனை பிஜாப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திரா யாதவ் இன்று உறுதிப்படுத்தி உள்ளார். தொடர்ந்து அந்த பகுதியில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.