

ராய்ப்பூர்
சத்தீஷ்காரின் ராய்ப்பூர் நகரில் சங்கர் நகர் பகுதியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியான திக்விஜய் சிங் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அக்கட்சியை சேர்ந்த சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், முன்னாள் துணை முதல்-மந்திரி சிங்தியோ மற்றும் பல்வேறு மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய திக்விஜய் சிங், நக்சல் வாதம் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார். சுரண்டலுக்கு எதிரான நக்சலைட்டுகளின் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம் என்றார். ஆனால், ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க மாட்டோம் என பேசினார்.
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் சுரண்டல்களுக்கு எதிரான அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போம் என்றார்.
அவர்களுடைய போராட்டம் ஆனது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கானது என கூறிய திக்விஜய் சிங், காங்கிரஸ் ஒருபோதும் நக்சலைட்டுகளை ஆதரிக்க முடியாது. நாங்கள் அவர்களுடைய வன்முறையை கண்டிக்கிறோம் என கூறினார்.