தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் அரிபாக் மச்சம்மா என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது.

இதில் இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டு சண்டையிட்டனர். இந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

இதனை காஷ்மீர் மண்டல போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். இதேபோன்று அந்த பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை