தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.

தினத்தந்தி

ரஜோரி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் காம்பீர் முக்லான் பகுதியில் ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டு நடவடிக்கையாக பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இதனை தொடர்ந்து, படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.

ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் 32 சுற்றுகள் கொண்ட தோட்டாக்கள் மற்றும் ஒரு கையெறி குண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணையும் நடந்து வருகிறது. தொடர்ந்து தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்