தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகள் திடீரென தாக்குகுதல் நடத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். அவர்களிடம் பேசி சரணடைய வைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அடுத்தகட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்