தேசிய செய்திகள்

தொழில் அதிபர் சேகர் ரெட்டி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: சுப்ரீம் கோர்ட்

தொழில் அதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தொழில் அதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2016- ஆம் ஆண்டு சேகர் ரெட்டி, அவரது உறவினர் மற்றும் ஆடிட்டர் வீடு அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் ரூ. 147- கோடிக்கு பழைய 500, 1000 நோட்டுகள், புதிய 2000 நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. 178- கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான 24 நாளில் 34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள் கிடைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், சேகர் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு