தேசிய செய்திகள்

முக்கியமான பொதுத் திட்டங்களுக்கு கருத்துகேட்பு இல்லாமலேயே சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் - மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

முக்கியமான பொதுத் திட்டங்களுக்கு கருத்துகேட்பு இல்லாமலேயே சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் டெல்லியில் நேற்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷவர்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தார். அவர் கொடுத்த மனுவில் உள்ள முக்கியமான கோரிக்கை வருமாறு:-

முக்கியமான பொதுத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்பது வழக்கம். கடந்தகாலங்களில் இதுபோன்ற சில கருத்துகேட்பு கூட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சுயநலத்துக்காக சிலரின் குறுக்கீட்டால் கூட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பெரும் இழப்புகளை சந்தித்தனர்.

எனவே, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி1 திட்டங்களுக்காக கருத்துகேட்பு நடத்தாமலேயே மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்க விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுதவிர, மேலும் 12 கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு