புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது. மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதுபோல் ஒய் எஸ். ஆர் காங்கிரசின் மத்திலா குரு மூர்த்தி, பா.ஜ.க எம்பி. மங்கள் சுரேஷ் அங்காடி, ஐ.யூ.எம்.எல் எம்.பி. அப்துஸ்சமத் சமதன் ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது;-
மக்களவையில் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட சிலரின் தொலைபேசிகள் உளவுபார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றாக தெரியும், இந்தியாவில் சட்டவிரோதமாக உள்வுபார்த்தல் என்பது சாத்தியமில்லை.
இந்தியாவில் அங்கீகாரமற்ற கண்காணிப்பு ஒருபோதும் நடைபெறாது. நாடாளுமன்றம் கூடுவதற்கு ஒருநாள் முன்னதாக, பரபரப்பான செய்திகள் வெளியானது தற்செயலானது அல்ல என்று கூறினார்.