புதுடெல்லி,
கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து உள்ள சீனாவின் உகான் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியர்கள் கடந்த 2 நாட்களாக டெல்லி அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை முடிந்ததும், அனைவரும் அரியானா மற்றும் டெல்லி ராணுவ மருத்துவ முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு 14 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.
இந்தநிலையில் அந்த முகாமில் உள்ள 6 பேர் முகத்தில் கவசம் அணிந்தபடி உற்சாகமாக ஆடிப்பாடி மகிழும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 16 வினாடிகள் ஓடும் இந்த காட்சியை ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு தங்களுக்கு இருக்குமா? இல்லையா? என எந்தவொரு கவலையும் இன்றி வாலிபர்கள் நடனமாடும் வீடியோவை பலர் லைக் செய்ததோடு, அதனை மற்றவர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.