தேசிய செய்திகள்

நாங்கள் வந்தால் டெல்லி காவல்துறையே பயப்படுகிறது: மம்தா பானர்ஜி

தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையருடன் நாங்கள் சந்திப்பு நடத்த வந்துள்ளோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியின் காரணமாக அம்மாநிலத்தில் 150 பேர் உயிரிழந்ததாக, முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார். எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், உயிருடன் இருப்பவர்கள் பலரது பெயர்கள் இறந்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் இறந்ததாக அறிவித்த 50 பேருடன் மம்தா பானர்ஜி டெல்லி சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-“தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். வாக்காளர் பட்டியலில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 50 பேருடன் நான் இங்கு வந்துள்ளேன். டெல்லி போலீஸ் யாரையும் பாதுகாக்க முடியாது. டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்தபோது டெல்லி காவல்துறை எங்கே சென்றது?

நாங்கள் அவர்களை விமர்சிக்கமாட்டோம். ஏனெனில் அது அவர்களின் தவறு அல்ல. டெல்லி காவல்துறையினர் அடங்கிய ஒரு பேருந்து இங்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையருடன் நாங்கள் சந்திப்பு நடத்த வந்துள்ளோம். முறையாக அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பிறகே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். டெல்லி காவல்துறையால் யாரையும் பாதுகாக்க முடியாது. டெல்லியில் இன்னும் ஒரு நில பிரபுத்துவ அமைப்புதான் செயல்பட்டு வருகிறது” என்றார்.

ஆதார் கார்டு விவரங்களை நீங்களே லாக் செய்யலாம்: எப்படி தெரியுமா?

சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி பேச்சு: மக்களவையில் பாஜக எம்.பிக்கள் அமளி

நாடாளுமன்றத்தில் அமளி - பிற்பகல் 3 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா பயணம்