தேசிய செய்திகள்

"அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" - பிரதமர் மோடி வலியுறுத்தல்

75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷன் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அனைவரும் கொரோனா தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நமது குடும்பம், கிராமம் அல்லது ஊர்களில் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்