தேசிய செய்திகள்

விவசாயிகளின் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ராகேஷ் திகாய்த்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களும் விவசாயிகளுடன் இணைய வேண்டும் என ராகேஷ் திகாய்த் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சத்தீஷ்கர் மாநிலத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் கூறியதாவது:-

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களும் விவசாயிகளுடன் இணைய வேண்டும். விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மத்திய அரசால் அடுத்து ஊடகங்கள் குறிவைக்கப்படலாம். ஊடகங்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் விவசாயிகளுடன் இணைய வேண்டும் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்