தேசிய செய்திகள்

ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், சமூக இடைவெளியை பின்பற்றுவது அடிக்கடி கைகளை சோப் அல்லது சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதனால், சானிடைசரின் தேவை தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமாக கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் சானிடைசர் கிருமி நாசினியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது