தேசிய செய்திகள்

பிப்ரவரி 28-ந்தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு

கொரோனா பரவலை தொடர்ந்து இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்து படிப்படியாக நீட்டிக்கப்படுகிறது. அந்தவகையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி வரை இந்த தடையை மேலும் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தினத்தந்தி

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.), சரக்கு விமான போக்குவரத்தை இந்த தடை கட்டுப்படுத்தாது எனவும் கூறியுள்ளது. அதைப்போல டி.ஜி.சி.ஏ. அனுமதித்துள்ள பயணிகள் விமான போக்குவரத்தும் இந்த தடையால் பாதிக்காது எனவும் கூறியுள்ளது.

அது மட்டுமின்றி சர்தேச அளவில் திட்டமிடப்பட்ட விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் தகுதிபெற்ற அதிகாரியின் அனுமதியுடன் இயங்கும் எனவும் டி.ஜி.சி.ஏ. தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது