தேசிய செய்திகள்

பொது நுழைவு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு - கர்நாடக துணை முதல்-மந்திரி அறிவிப்பு

பொது நுழைவு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக துணை முதல்-மந்திரியும், உயர்கல்வித்துறை மந்திரியுமான அஸ்வத் நாராயண் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொது நுழைவு தேர்வில் கலந்து கொள்ள கர்நாடக மாணவர்கள் ஆன்லைன் மூலம் 9-ந் தேதிக்குள் (நேற்று) விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் மாணவர்கள், பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு வருகிற 16-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விளையாட்டு சான்றிதழ்கள், தேசிய மாணவர் படை சான்றிதழ் இருந்தால் அதையும் சேர்த்து மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து