பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.75 கோடி) வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியுதவியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் ஃபண்ட் ஃபார் கூன்ஜ் (Community Resilience Fund for GOONJ ) எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கும் என்று கூறி உள்ளது.
சர்வதேச சமுதாயத்தின் மூலம் ஃபேஸ்புக்கின் சிறிய பங்களிப்பாக இந்த நிதி வழங்கப்படுவதாக ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கேரள வெள்ள பாதிப்புகளுக்கு உதவ பிரத்யேக க்ரூப்கள், லைவ் வீடியோக்கள் மற்றும் பக்கங்கள் ஃபேஸ்புக் வலைதளத்தில் தொடங்கப்பட்டு நிவாரண உதவிகள் பெறப்பட்டு வருகின்றன.