தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பட்டாசு வெடித்த போது கோஷ்டி மோதல்; ஒருவர் கொலை

உத்தரபிரதேசத்தில் பட்டாசு வெடித்த போது கோஷ்டி மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலம் சாமிளி மாவட்டத்தில் உள்ள சிவ் காலனி பகுதியில் நேற்று தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்ததால் இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். கற்களால் மாறி மாறி வீசி தாக்கினர்.

இந்த தாக்குதலில் சஞ்சீவ் சைனி, ராகுல் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சஞ்சீவ் சைனி பரிதாபமாக உயிரிழந்தார். ராகுலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு வெடித்த போது கோஷ்டி மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT