தேசிய செய்திகள்

முதல்-மந்திரி ரகுபர் தாஸ் தோல்வி: சுயேச்சையாக போட்டியிட்ட தனது மந்திரியிடம் வீழ்ந்தார்

சுயேச்சையாக போட்டியிட்ட தனது மந்திரியிடம், முதல்-மந்திரி ரகுபர் தாஸ் தோல்வியடைந்தார்.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி ரகுபர் தாஸ் தோல்வி அடைந்தார். முதலில் அவர் முன்னிலையில் இருந்தபோதிலும், இறுதியில் தோற்று விட்டார்.

அவரை தோற்கடித்தவர், சுயேச்சை வேட்பாளர் சரயு ராய். இவர், தேர்தலுக்கு முன்புவரை ரகுபர் தாஸ் மந்திரிசபையில் கேபினட் மந்திரியாக இருந்தவர். தேர்தலில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், மந்திரிசபையில் இருந்தும், பா.ஜனதாவில் இருந்தும் விலகி, ரகுபர் தாசை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கினார். இப்போது, வெற்றி பெற்று விட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து