தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் ரத்து: பிரதமருக்கு எதிராக உமா பாரதி கருத்து!

வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் அதுகுறித்து மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று கடந்த வாரம் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் ஆளும் பா.ஜ.கவின் தலைவர்களுள் ஒருவருமான உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து உமா பாரதி கூறியிருப்பதாவது, இது நாள் வரையில், இந்தியாவில் வாழும் விவசாயிகள் அரசின் நடவடிக்கைகளால் திருப்தி அடையவில்லை.

பிரதமரால் வேளாண் சட்டங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை.

எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்கள் குறித்து தவறாக பிரச்சாரம் செய்துள்ளன என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்