தேசிய செய்திகள்

போலி சான்றிதழ் விவகாரம்: தனியார் பல்கலைக்கழகத்தின் கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கம்

போலி சான்றிதழ் விவகாரத்தில் தனியார் பல்கலைக்கழகத்தின் ரூ.194.17 கோடி சொத்துகளை அமலாக்க துறை முடக்கியுள்ளது.

தினத்தந்தி

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் சோலான் நகரை மையம் ஆக கொண்டு இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று போலி சான்றிதழ்களை வினியோகித்து வந்தது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இதுவரை 17 மாநிலங்களுக்கு இதுபோன்று போலி சான்றிதழ்களை வழங்கி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முக்கிய குற்றவாளி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி இமாசல பிரதேச டி.ஜி.பி. சஞ்சய் குண்டு கூறும்பொழுது, நிதி புலனாய்வு பிரிவு, அமலாக்க இயக்குனரகம் மற்றும் வருமான வரி துறை ஆகியோருடன் இணைந்து இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, போலி சான்றிதழ் விவகாரத்தில் தனியார் பல்கலைக்கழகத்தின் ரூ.194.17 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கையை அமலாக்க துறை எடுத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து