தேசிய செய்திகள்

சுமித்ரா மகாஜன் நலமாக உள்ளார்: பாஜக மூத்த தலைவர் தகவல்

மக்களவையின் முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன் நலமாக உள்ளார் என பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையின் முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன் நலமாக உள்ளார் என பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன் குறித்து நேற்று இரவு முதல் தவறான செய்திகள் பரவின. இதையடுத்து சுமித்ரா மகாஜன் நலமாக உள்ளார் என்றும் அவரை பற்றிய செய்திகள் வெறும் வதந்தியே என்றும் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், சுமித்ரா மகாஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைவதாக பதிவிட்டு இருந்தார். இதற்கு விஜய்வர்கியா பதில் அளித்ததை அடுத்து சசிதரூர் அந்த பதிவை நீக்கியுள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை