ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் நகார் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் பெண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது. அதனை அவர்களின் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அதில் ஏற்றி சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.
இதுபற்றி அந்த பெண் குழந்தையின் தாத்தாவான மதன்லால் கூறும்பொழுது, எங்களுடைய குடும்பத்தில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் குழந்தை பரிசாக கிடைத்துள்ளது. அதனால் நாங்கள் இந்த ஏற்பாடு செய்துள்ளோம். அவளது அனைத்து கனவுகளையும் நிறைவேற்றுவோம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.