தேசிய செய்திகள்

பேஸ்புக் கணக்கை நிரந்தரம் ஆக அழித்தும் ஆக்டிவாக உள்ளது: இந்தி நடிகர் பர்ஹான் அக்தர் குற்றச்சாட்டு

பேஸ்புக் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முகநூல் கணக்கை அழித்த பின்பும் அது ஆக்டிவாக உள்ளது என டுவிட்டரில் நடிகர் பர்ஹான் அக்தர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். #FarhanAkhtar

தினத்தந்தி

மும்பை,

அமெரிக்காவில் 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், இந்தி நடிகர் மற்றும் இயக்குநரான பர்ஹான் அக்தர் தனது முகநூல் கணக்கினை நிரந்தரம் ஆக அழித்து உள்ளார். ஆனால் அவரது முகநூல் பக்கம் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளது என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், தனது முகநூல் பக்கத்தில் இருந்தது வெளியேறியது பற்றிய காரணத்தினை அக்தர் தெரிவிக்கவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்