தேசிய செய்திகள்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

மூடிகெரெ அருகே கள்ளக்காதலை மனைவி கைவிடாததால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சிக்கமகளூரு-

கள்ளக்காதல்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோணிபீடு அருகே உள்ள உக்கஹேள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி நேத்ரா. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்த உள்ளது. ஜெகதீஷ் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் ஜெகதீசிற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து நேத்ராவுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து நேத்ராவும், அந்த வாலிபரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் நேத்ராவின் கணவர் ஜெகதீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார்.

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

மேலும் வாலிபருடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இதுதொடர்பாக ஜெகதீஷ், நேத்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நேத்ரா வாலிபரின் கள்ளக்காதலை கைவிட மறுத்துள்ளார். இதனால் ஜெகதீஷ் விரக்தியடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெகதீஷ் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினா கோனிபீடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜெகதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். இது குறித்து கோனிபீடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்